திருச்சியில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை
திருச்சி: திருச்சியில் வாலிபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மர்மமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகே உள்ள காலி இடத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனைக் கண்ட சிலர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த மலைக்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் சேகர், உள்ளிட்ட போலீசார் அங்கு வந்து சோதனை மேற்கொண்டனர்.
கொலை செய்யப்பட்ட வாலிபர் கருப்பு கலர் பேண்டு, 'டி' சர்ட் அணிந்திருந்தார். கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது. வயிற்றில் கத்தியால் குத்தியதில் குடல் சரிந்து இருந்தது. கையில் ஒரு கட்டையை பிடித்திருந்தபடி அவர் பிணமாக கிடந்தார். அவரது சட்டை பையில் ஒரு ஏ.டி.எம். கார்டும், அதில் பாண்டி என்ற பெயரும் எழுதப்பட்டு இருந்தாக போலீசார் தெரிவித்தனர்.
இறந்து போன பாண்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவரது சட்டை பையில் இருந்த ஏ.டி.எம். கார்டை வங்கியில் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் தகவலை வைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் கொலையாளிகள் யார் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுபோதையில் தகராறு ஏற்பட்டு கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சியின் முக்கியப்பகுதியில் நடந்த கொலை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் கொலை
இதேபோல் ராமநாதபுரம் தெற்குத்தெருவயல் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (25), என்ற கட்டடத்தொழிலாளி அவரது உறவினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தேவிப்பட்டிணம் செல்லும் சாலையில் உள்ள டீக்கடையில் சக்திவேல் டீ குடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த அவரது உறவினர் கணேசன் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இதனையடுத்து போலீசார் கணேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications