மாண்டலின் ஸ்ரீநிவாசுக்கு விவாகரத்து: மனைவிக்கு ரூ.50 லட்சம் ஜீவனாம்சம் தர உத்தரவு

ஐஏஎஸ் அதிகாரியின் மகளான ஸ்ரீ என்பவரை 1994ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி மாண்டலின் ஸ்ரீநிவாஸ் திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு ஸ்ரீ தனது மகனுடன் 16 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வருகிறார்.இது தொடர்பாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கு ஸ்ரீநிவாஸுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. அதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில் இதை எதிர்த்து ஸ்ரீ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார்.இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளதாவது:
ஸ்ரீநிவாஸ் தரப்பில், மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் அவர் பிரபலமானவர் என்ற நிலையில், அவரது புகழை கெடுக்கும் வகையில் மனைவி நடந்து கொண்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.எனவே ஸ்ரீநிவாஸுக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. இருப்பினும் அவரது மனைவி, தனது மகனுடன் சமூகத்தில் மதிப்புடன் வாழ அவருக்கு ரூ.50 லட்சம் ஜீவனாம்சம் 4 மாதத்துக்குள் வழங்க வேண்டும். இதில் ரூ.20 லட்சத்தை நிரந்தர வைப்பு நிதியாக வங்கியில் செலுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications