கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும்- சர்வே

காங்கிரஸுக்கு 115 சீட் கிடைககும்
அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 115 இடங்கள் கிடைக்குமாம். அதேசமயம், பாஜகவுக்கு வெறும் 58 இடங்ள் மட்டுமே கிடைக்கும் என்றும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 31 சீட்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதியூரப்பாவுக்கு பலத்த அடி கிடைக்கும்
பாஜகவை உடைத்து வெளியே வந்துள்ள முன்னாள் முதல்வர் எதியூரப்பாவுக்கு இந்தத் தேர்தலில் பெரும் அடியே கிடைக்கும் என்றும் அவரது கட்சிக்கு 14 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் சர்வே முடிவு தெரிவிக்கிறது.
கர்நாடகத்தின் 158 நகரங்கள், 658 கிராமங்களில் 10,279 பேரை சந்தித்து இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அனைத்து சாதி, மதம் மற்றும் பல்வேறு வயதினரிடம் சர்வே நடத்தப்பட்டுள்ளது.
85 எம்.எல்.ஏக்களுக்கே மீண்டும் வெற்றி
காங்கிரஸ் கட்சிக்கு சட்டசபைத் தேர்தலில் 36 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது. தற்போதை சட்டசபையில் உறுப்பினர்களாக உள்ள 224 பேரில் 85 எம்.எல்.ஏக்கள் மட்டுமே மீண்டும் தேர்வாகும் வாய்ப்பு உள்ளதாம். மற்றவர்கள் தோல்வியைத் தழுவுவார்களாம்.
இப்படித் தோல்வியைத் தழுவுவோரில் அதிகம் பேர் பாஜகவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதாவது பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களில் 60 பேர் படுதோல்வியைத் தழுவுவார்களாம்.
லிங்காயத்துகள் எதியூரப்பா பின்னால்
லிங்காயத்து சமுதாயத்தினரில் 54 சதவீதம் பேர் எதியூரப்பாவை ஆதரிக்கின்றனர். அதேசமயம், பாஜகவுக்கு அவர்களின் ஆதரவு மங்கிப் போய் விட்டது. அதாவது 25 சதவீதம் பேரே பாஜகவை ஆதரிப்பார்களாம்.
ஒக்கலிகா ஆதரவு கெளடாவுக்கே
முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் வழக்கம் போல காங்கிரஸ் பக்கமே நிற்கின்றனர். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரும் காங்கிரஸையே ஆதரிக்கின்றனர். ஒக்கலிகா சமுதாயத்தினரின் வாக்குகள் பெரும்பாலும் தேவெ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கே போகிறதாம்.
மகா ஊழல் கட்சி பாஜகதான்
இருப்பதலியே மிகவும் மோசமான ஊழல் கட்சி பாஜகதான் என்று 40 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 2வது இடம் காங்கிரஸுக்கு, 31 சதவீதம் பேர் காங்கிரஸை ஊழல் கட்சி என்று கூறியுள்ளனர். மதச்சார்பற்ற ஜனதாதளம் ஊழல் கட்சி என்பது 7 சதவீதம் பேரின் கருத்தாகும்.
அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு பெரும்பாலானவர்களின் ஆதரவு காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவுக்கே கிடைத்துள்ளது. அவருக்கு 19 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. 2வது இடத்தில் எதியூரப்பா 15 சதவீத ஆதரவுடன் இருக்கிறார். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு 12 சதவீத ஆதரவு காணப்படுகிறது.
எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு 7, சதானந்த கெளடாவுக்கு 6, ஜெகதீஷ் ஷெட்டருக்கு 4 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications