மின்வெட்டு.. அறப்போராட்டத்தில் நான் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கவில்லை-கருணாநிதி

இதுதொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி
கேள்வி: திமுக அறப் போராட்டம் எப்படி இருக்கும்?
பதில்: அறப்போராட்டம் ஒவ்வொரு மாவட்டம், சுற்றுப்புற பகுதிகளில் நடக்கிறது. சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு ஆர்ப்பாட்டம் நடக்கும். குக்கிராமங்களில் கூட ஆங்காங்கு இருக்கின்ற தொண்டர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.
கேள்வி: சென்னையில் நடக்கும் போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்வீர்களா?
பதில்: இதுபற்றி முடிவெடுக்கவில்லை.
கேள்வி: எம்.ஜி.ஆர். சமாதியில் அரசின் சார்பில் இரட்டை இலை சின்னம் வைக்கப்பட்டுள்ளதே?
பதில்: இதுபற்றி வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. இப்போது இதுபற்றி சொல்வதற்கில்லை.
கேள்வி: வால்மார்ட் அலுவலகம் அண்ணா நகரில் இயங்குவதற்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளதே?
பதில்: தீர்மானங்களில் இது பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறோம்.
கேள்வி: மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக தமிழகத்துக்கு மின்சாரத்தை பெற்று தரலாமே?
பதில்: வேறு மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொண்டு வருவதற்கு வழித்தடங்கள் இல்லை. மத்தியில் இருந்த முந்தைய ஆட்சியாளர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும்.
கேள்வி: மத்திய அரசிடம் தமிழக அரசு மின்சாரம் கேட்டு இருக்கிறது. அதை நீங்கள் வலியுறுத்துவீர்களா?
பதில்: தமிழ்நாட்டு நலனுக்காக திமுக எதையும் செய்யும். அதற்கான சூழ்நிலை உருவானால் திமுக அதில் பங்கெடுக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications