தூக்கில் தொங்கிய வாலிபர்: கள்ளத் தொடர்பால் கொலையா?...
அரியலூர்: அரியலூர் அருகே வாலிபர் ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளத்தொடர்பு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் சின்னகருக்கை கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி (வயது 27). இவருக்கும் திட்டக்குடி அருகே உள்ள அய்யலூர் கிராமத்தை சேர்ந்த மகாதேவி என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சரண்யா (8), அய்யப்பன் (6) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
சிவசாமிக்கு அந்த ஊரில் உள்ள சில பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படவே சிவசாமி தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் ஊரை காலி செய்து விட்டு மாமியார் வீட்டுக்கு சென்று வசித்து வந்தார்.
இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு சிவசாமி சொந்த ஊரான சின்ன கருக்கை கிராமத்திற்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் சின்னகருக்கை கிராமத்தில் முனியப்பன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகு தியில் சிவசாமி மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். இதுகுறித்து சிவசாமியின் அண்ணன் ஆனந்தராஜ் என்பவர் தம்பியின் சாவில் மர்மம் இருப்பதாக ஆண்டிமடம் போலீசில் புகார் தெரிவிக்கவே, போலீசார் சிவசாமியின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிவசாமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கள்ளத்தொடர்பு தகராறில் மர்ம நபர்களால் கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications