பாக். வருமான வரி கட்டாத அதிபர் சர்தாரி- 34 அமைச்சர்கள்!

பாகிஸ்தான் வருமான வரித்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மட்டுமல்ல அமைச்சர்கள் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. முன்னாள் பிரதமர் யூசுப்ராசா கிலானி, உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், வர்த்தகத் துறை அமைச்சர் மக்தூம் அமின் பாகிம் ஆகியோரும் வருமானவரி தாக்கல் செய்யவில்லை.
பாகிஸ்தானில் கேபினட் அமைச்சர்களாக 55 பேர் இருக்கின்றனர். இவர்களில் 34 பேர் வருமான வரி செலுத்தவில்லை. 20 அமைச்சர்கள்தான் வருமான வரி செலுத்தி இருக்கின்றனர். அந்த நாட்டின் 341 எம்.பிக்களில் 90 பேர்தான் வருமான வரி செலுத்தியிருக்கின்றனர். வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானிகா எவ்வளவு வருமான வரி செலுத்தியிருக்கிறார் தெரியுமா? ரூ19 ஆயிரத்துக்கு 619! பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(கியூ பிரிவு) பொதுச்செயலாளர் கட்டிய வருமான வரி ரூ82தான்!
அதிபரே வருமான வரி செலுத்தாத காரணத்தால்தான் அந்த நாடு அமெரிக்கா போன்ற நாடுகளிடம் நிதிக்காக கை ஏந்தி நிற்கிறது!












Click it and Unblock the Notifications