திமுக டிவி பாணியில் அதிமுக லேப்டாப்கள் கேரளாவில் அமோக விற்பனை!
திருவனந்தபுரம்: கடந்த திமுக ஆட்சியின்போது இலவசமாக வழங்கப்பட்ட கலர் டிவிகள் கேரளாவில் நல்ல விலைக்கு விற்கப்பட்டதைப் போல தற்போது அதிமுக ஆட்சியில் பிளஸ்டூ மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லேப்டாப்களை கேரளாவில் நல்ல விலைக்கு விற்க ஆரம்பித்துள்ளனர்.
லேப்டாப் மட்டுமல்லாமல், அதிமுக அரசு இலவசமாக வழங்கி வரும் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவையும் கூட நல்ல கிராக்கியுடன் விற்பனையில் உள்ளனவாம்.
கடந்த திமுக ஆட்சியின்போது படு சூடாக விநியோகிக்கப்பட்ட இலவசப் பொருள் இலவச கலர் டிவிதான். இந்த டிவி கிட்டத்தட்ட தமிழகத்தின் அத்தனை வீடுகளுக்கும் போய்ச் சேர்ந்த ஒன்றாகும். ஆனால் பெரும்பாலான டிவிகளை மக்கள் விற்பனை செய்து காசு பார்த்து விட்டனர். கேரளாவில்தான் இந்த கலர் டிவிகள் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டன.
தற்போது இதே பாணியில் அதிமுக அரசு இலவசமாக வழங்கி வரும் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, மாணவர்களுக்கான லேப்டாப்கள் போன்றவையும் நல்ல விலைக்கு விற்கப்பட்டு வருகிறதாம். இவையும் கேரளாவில்தான் விற்பனையாகி வருகின்றன.
பிளஸ்டூ மாணவர்களுக்காக அரசு இலவசமாக வழங்கும் லேப்டாப்பை ரூ. 10,000 வரை விலை வைத்து விற்று வருகின்றனராம். கவரைக் கூட பிரிக்காம்ல அப்படியே இவை விற்பனைக்கு அனுப்பப்படுகிறதாம்.
மாணவர்களின் படிப்புக்காக மக்கள் பணத்தை செலவு செய்து அரசு இந்த இலவசப் பொருட்களைத் தந்து வருகிறது. ஆனால் அதை பொறுப்பில்லாமல் இப்படி விற்று காசு பார்க்கும் செயலை அரசு தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications