படித்த இளைஞர்களை தொழில்முனைவோராக்க 100 கோடி ஜெ. ஒதுக்கீடு
சென்னை: படித்த பட்டதாரி இளைஞர்களை முதல்தலைமுறை தொழில்முனைவோராக மாற்றவும் ஆண்டுதோறும் ஆண்டுதோறும் 1000 தொழில் முனைவோர்களை உருவாக்கவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக மாற்ற உதவும் நோக்குடன் 'புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம்' என்ற புதிய திட்டத்தை 2012-13 ஆம் ஆண்டு முதல் செயல்படும்.
இதன்படி, படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு, தொழில் தொடங்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, நிதிநிறுவனங்களில் நிதியுதவி பெற உதவுவதுடன், பெரும் தொழில் நிறுவனங்களுடன் அவர்களுக்கு வணிகத் தொடர்பும் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகியவற்றின் மூலம் 25 லட்சம் ரூபாய்க்கு மிகாத 25 விழுக்காடு முதலீட்டு மானியமும், மூன்று விழுக்காடு வட்டி குறைப்புடன் கூடிய கடனும் பெற உதவி செய்யப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தின் கீழ் 1,000 தொழில் முனைவோருக்குப் பயிற்சி அளிக்கப்படும். இதில் ஆதிதிராவிட இன பயனாளிகளுக்கு 18 விழுக்காடும், பழங்குடியின பயனாளிகளுக்கு 1 விழுக்காடும், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 விழுக்காடும், மகளிருக்கு 50 விழுக்காடும் முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்திட்டத்தினை செயல்படுத்த 100 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் முதல் தவணையாக 51 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதியினை விடுவித்தும் ஆணை பிறப்பித்துள்ளார். இந்தத் திட்டத்தினை செயல்படுத்துவதில் தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனமும், தமிழ்நாடு முதலீட்டு கழகமும் முக்கிய பங்கு வகிக்கும்.
தொழிற்பேட்டைகள் நன்கு பராமரிக்கப்பட்டால்தான் அங்கு செயல்படும் தொழில் நிறுவனங்கள் நன்கு செயல்பட்டு உற்பத்தியை பெருக்க இயலும். அதுமட்டுமல்லாமல், புதிய நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை தொடங்க தொழிற்பேட்டை நிர்வாகத்தை அதிக அளவில் அணுகும் நிலையும் ஏற்படும்.
இதனைக் கருத்தில் கொண்டு திருவள்ளூர் மாவட்டம் காக்களுர் மற்றும் சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள மின் மற்றும் மின்னணு தொழிற்பேட்டைகளில் சாலைகளை வலுப்படுத்துதல், கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்புகளை சீர்செய்தல், மழைநீர் வடிகால் வசதிகளை செய்தல் மற்றும் தெரு விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications