இடஒதுக்கீடு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு- பார்லி.யை முடக்கியது சமாஜ்வாடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு அரசுப் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து பார்லிமெண்ட்டை சமாஜ்வாடி கட்சி முடக்கி வைத்திருக்கிறது.

இன்று காலை ராஜ்யசபா கூடியபோது சமாஜ்வாடி கட்சி எம்.பிக்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் ராஜ்யசபா முற்பகல் 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

லோக்சபாவிலும் இதேபோல் சமாஜ்வாடி எம்.பிக்கள் கடுமையான முழக்கங்களை எழுப்பினர். அமளிகளுக்கு இடையே சபையை நடத்த சபாநாயகர் முயற்சித்தது பலனளிக்கவில்லை. இதனால் சபை முற்பகல் 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் இரண்டு அவைகளும் 11.30 மணிக்கு கூடிய போதும் சமாஜ்வாடி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்தும் சபைகள் ஒத்திவைக்கப்பட்டு கூடுவதாக இருந்தது. தற்போது லோக்சபா 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+