ஜெ. தலைமையில் தொடங்கியது கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாடு
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு சென்னையில் தொடங்கியது.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து விவாதிக்கவும், அரசு திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை திறனாய்வு செய்யவும், மக்களின் தேவைக்கேற்ப திட்டங்களில் மாற்றம் தேவையா? என்பது பற்றி ஆலோசிக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டினை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி, ஜெயலலிதா தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் இன்று காலை 10 மணியளவில் தொடங்குகியது.
முதலில் கூட்டு கூட்டம்
இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஒருங்கிணைந்த மாநாடு நடைபெறுகிறது. ஜெயலலிதா, மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார்.
இதையடுத்து நாளை 18ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைர்கள் மாநாடும், 19ம் தேதி போலீஸ் அதிகாரிகள் மாநாடும் நடைபெறுகிறது.
மாநாட்டில், அமைச்சர்கள், அரசு தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., அரசுத்துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், எஸ்.பிக்கள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டின் நிறைவில், தமிழ்நாட்டில் சிறப்பாக பணியாற்றிய ஆட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கேடயம் வழங்குகிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications