உலகம் அழியப்போகுது… சீனாவில் பீதி கிளப்பிய நால்வர் கைது

Subscribe to Oneindia Tamil

Beijing
பீஜிங்: டிசம்பர் 21ம் தேதியுடன் உலகம் அழியப்போவதாக சீனாவில் பீதி கிளப்பிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

உலக அழிவு பற்றித்தான் இன்றைக்கு ஊடகங்களில் பரபரப்பான பேச்சு அடிபடுகிறது. இணையதளங்களில் அதிக அளவில் தேடியது உலக அழிவு பற்றிய செய்திகளாகத்தான் உள்ளது. இந்த நிலையில் சீனா நாட்டில் இந்த மாதம் 21 ஆம் தேதியுடன் உலகம் அழியப்போகிறது என்று பல்வேறு ஊர்களில் பொதுச் இடங்களில் கூடி சிலர் பிரச்சாரம் செய்துள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சீனா நாட்டின் மத்தியப் பகுதியிலும் மேற்கு மாகாணங்களிலும் பல இடங்களில் உலகம் அழியப்போகிறது என்று நம்பும் பிரிவினர் உள்ளனர். மாயா என்ற அழிந்துபோன அமெரிக்க நாகரிகத்தின் கூற்றுப்படி இந்த மாதம் உலகம் அழியும் என்று இந்தப் பிரிவினர் நம்புகின்றனர். இதனை இணையத்தில் பரப்பி பீதியை கிளப்பி வருகின்றனர். ஆங்காங்கே பொது இடங்களில் கூடி பிரசங்கம் செய்து வருகின்றனர். அவர்களை எச்சரித்த போலீசார் கலைந்து போகும் படி அறிவுறுத்தியுள்ளனர். ஒரு சிலரை கைதும் செய்துள்ளனர்.

ஹாங்காங் நகரில் இந்த காரணத்துக்காக 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன. உலக அழிவு பற்றி பிரச்சாரம் சீனாவில் மட்டுமல்லாது வேறு பல நாடுகளிலும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+