2012 மிஸ் யுனிவர்ஸ் போட்டி: பட்டம் வெல்வாரா இந்திய அழகி ஷில்பாசிங்?
மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகிப்போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு இந்திய அழகி ஷில்பாசிங் பட்டம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலக அழகிகளை தேர்வு செய்ய மிஸ் வேர்ல்டு, மிஸ் யுனிவர்ஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் டிசம்பர் 19ம் தேதி நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்தும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அழகிகள் பங்கேற்றுள்ளனர்.
கடந்த 2 மாதங்களாக இந்த அழகிகளிடையே பல்வேறு சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை நடைபெற்ற பல போட்டிகளில் இந்திய அழகி ஷில்பா தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் இந்திய அழகிகளுக்கு வெற்றிவாய்ப்பு அதிகரித்துள்ளது.

பிரபஞ்ச அழகிப்போட்டி
பிரபஞ்ச அழகிப் பட்டமானது 1952 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் முதன் முதலாக வழங்கப்பட்டது. அன்றிலிருந்து வருடா வருடம் அழகிகளை தேர்ந்தெடுத்து இந்த பட்டமானது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 61 வது பிரபஞ்ச அழகிப்போட்டி லாஸ்வேகசில் உள்ள பிளானட் ஹாலிவுட் ரெசார்ட்டில் நடைபெறுகிறது.

சாப்ட்வேர் என்ஜீனியர் ஷில்பா
இந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் ஷில்பாசிங் கலந்து கொண்டுள்ளார். இவர் பீகார் மாநிலம் சமஸ்தீப்பூர் மாவட்டத்தில் உள்ள திகா எனும் கிராமத்தில் பிறந்தவர். 23 வயதாகும் ஷில்பாசிங், முசாபர்பூர், ராஞ்சி, ஜாம் ஷெட்பூர் நகரங்களில் படித்தவர். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

ஷில்பாவுக்கு அதிர்ஷ்டம்
இந்தியாவில் நடந்த தேர்வு போட்டியில் ஷில்பாவுக்கு இரண்டாவது இடமே கிடைத்திருந்தது. முதல் இடம் பிடித்த ஊர்வசியின் வயது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், அவர் நீக்கப்பட்டு, ஷில்பாவுக்கு மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிங்க் நிற உடையில் ஷில்பா
இந்த போட்டியில் ஈவினிங் கவுன் போட்டியில் பிங்க் நிற கவுன் அணிந்து வந்து இந்திய அழகி ஷில்பா அனைவரின் உள்ளத்தை கொள்ளை கொண்டார்.

நீச்சலுடையில் எழிலாய் ஷில்பா
மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் மிகமுக்கிய அம்சமான நீச்சலுடை போட்டியில் ஷில்பா அணிந்திருந்த ஆரஞ்சு நிற உடை அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது என்கின்றனர்.

பட்டம் வெல்வாரா?
லாஸ்வேகாஸ் நகரில் இதுவரை நடந்துள்ள பல்வேறு சுற்றுப் போட்டிகளில் ஷில்பா தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். எனவே மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை சில்பா வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு இந்திய மாடலிங் உலகில் நிலவுகிறது.

சுஸ்மிதா சென், லாரா தத்தா
இதுவரை நடைபெற்ற பிரபஞ்ச அழகிப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சுஸ்மிதா சென் 1994ம் ஆண்டும், லாரா தத்தா 2000மாவது ஆண்டிலும் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றுள்ளனர்.

கைக்கு எட்டவில்லை
2001-ம் ஆண்டு இந்திய அழகி செலீனா ஜெட்லி 4-வது இடத்தைப் பிடித்து பட்டத்தை நூலிழையில் தவற விடடார். அதன் பிறகு இந்திய அழகிகள் யாரும் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை நெருங்க கூடவில்லை.

அங்கோலா நாட்டு அழகி
2011ம் ஆண்டு அங்கோலா நாட்டு அழகி மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார். இதில் இந்திய அழகியான வாசுவு சங்கவாலி முதல் சுற்றுடன் வெளியேறினார். 2010ம் ஆண்டு மெக்சிகோ நாட்டு அழகி ஜிமெனா நவரட் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார்.

சுஷ்மிதா சென் பயிற்சி
இந்த ஆண்டு நிச்சயம் இந்திய அழகி மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுவதற்குக் காரணம் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா சென்தான் பயிற்சி அளிக்கிறாராம். இதனாலேயே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நாளை மறுதினம் லாஸ்வேகஸ் நகரில் நடைபெறும் இப்போட்டியை NBC தொலைக்காட்சி, ஐரோப்பிய நேரம் இரவு 8 மணிமுதல் நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறது .
-
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications