பள்ளியில் சண்டை: கூடப்படிக்கும் குஷ்புவை தீ வைத்து கொளுத்திய மாணவி
போபால்: மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவி ஒருவர் சக மாணவி ஒருவரின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டம் பரேலியில் இருக்கும் உயர் நிலைப்பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவி ரூபாலி. அவரது வகுப்பில் படிப்பவர் குஷ்பு(18). ரூபாலிக்கும், குஷ்புவுக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று பள்ளியில் வைத்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குஷ்பு ரூபாலியின் நடத்தை பற்றி ஏதோ தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் ரூபாலி ஆத்திரம் அடைந்தார்.
பள்ளி முடிந்து அவரவர் வீட்டுக்கு சென்றனர். ஆனால் ரூபாலியால் பள்ளியில் நடந்ததை மறக்க முடியவில்லை. இதையடுத்து அவர் நேராக குஷ்புவின் வீட்டுக்கு சென்று அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் குஷ்புவுக்கு 40 சதவீத காயம் ஏற்பட்டது. அவரைக் காப்பாற்ற முயன்ற குஷ்புவின் அம்மாவுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
தீக்காயங்களுடன் குஷ்புவும், அவரது அம்மாவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து ரூபாலியை கைது செய்தனர்.
பள்ளி மாணவி ஒருவர் இவ்வாறு வெறித்தனமாக நடந்து கொண்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications