மின்வெட்டை எதிர்த்து அறப்போர்: சென்னையில் கருணாநிதி, குஷ்பு! காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு!

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த 13ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில், தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத மின்வெட்டை கண்டித்தும் அதிமுக அரசுக்கு எதிராகவும் 18-ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள், நகர, ஒன்றிய பேரூராட்சிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி இன்று காலை தென்சென்னை, வடசென்னை மாவட்ட திமுக சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன், வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்த்னர். திமுக தலைவர் கருணாநிதி, குஷ்பு, பொன்முடி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்., திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் மாதவரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் கலந்து கொண்டனர்.
இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications