கூடங்குளம் அணுமின் நிலையத்துக்காக கன்னியாகுமரியில் விமான நிலையம் தேவை: திமுக
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு வந்து செல்லும் ரஷிய விஞ்ஞானிகளின் வசதிக்காக கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்திருக்கிறது.
லோக்சபாவில் திமுக உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் நேற்று கேள்வி எழுப்பி பேசுகையில், ஆன்மீக சுற்றுலாத்தலமாக கன்னியாகுமரி திகழ்கிறது. அங்கு விமான நிலையம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து 800 ஏக்கர் நிலப்பரப்பில் க்ரீன் ஃபீல்டு விமான நிலையம் அமைக்க நிலம் கண்டறியப்பட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைந்தால் வேலைவாய்ப்பு பெருகும், கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தைப் பார்வையிட வரும் ரஷிய விஞ்ஞானிகள் நிபுணர்கள் வந்து செல்ல வசதி ஏற்படும் என்றார் அவர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நீடித்து வரும் நிலையில் திமுகவோ ரஷிய விஞ்ஞானிகளுக்காக விமான நிலையம் அமைக்கக் கோரி இருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications