'கேஸ்' பயன்பாட்டில் ஜெயலலிதாவை தூக்கிச் சாப்பிட்ட கோகுல இந்திரா!
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டில் முதல்வர் ஜெயலலிதாவையே ஓரம் கட்டி விட்டார் வணிகவரித்துறை அமைச்சர் கோகுல இந்திரா.
மிகவும் சிறிய குடும்பம்தான் கோகுல இந்திராவுடையது. கணவர், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் அவர்தான் அதிக அளவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தியுள்ள தமிழகத்து விஐபியாக உயர்ந்துள்ளார்.
இண்டேன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சமையல் எரிவாயு பயன்பாடு குறித்த இணையதளத் தகவலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 44 சிலிண்டர்கள்
கோகுல இந்திரா இதுவரை 44 சிலிண்டர்களை பயன்படுத்தியுள்ளார். இதன் மானிய விலையானது ரூ. 9,166.40 ஆகும். இவரது கேஸ் இணைப்பு எண் 77060 ஆகும்.

கடந்த வருடம் 46 சிலிண்டர்கள்
கோகுல இந்திரா கடந்த வரும் 46 காஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்தியிருந்தார். அப்படிப் பார்க்கையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 2 சிலிண்டர்கள் குறைவுதான்.

2வது இடம்தான் ஜெயலலிதாவுக்கு
முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்த பட்டியலில் 2வது இடமே கிடைத்துள்ளது. கோகுல இந்திராவுக்கு அடுத்த இடத்தில்தான் அவரது முதல்வரே இருக்கிறார். அதாவது ஜெயலலிதா 55 சிலிண்டர்கள மட்டுமே இந்த ஆண்டு இதுவரை பெற்றுள்ளார்.

ஜெ. பெயரில் 9 இணைப்புகள்
முதல்வர் ஜெயலலிதா வீட்டில் இத்தனைக்கும் 9 இணைப்புகள் உள்ளன. அதில் 2 அவரது பெயரில் உள்ளது. மற்றவை இளவரசி, சசிகலா, அனுராதா ஆகியோரது பெயர்களில் உள்ளன.

சசிகலாவுக்கு 4 இணைப்புகள்
சசிகலாவுக்கு போயல் கார்டன் முகவரியிலேயே 4 இணைப்புகள் உள்ளன. இரண்டு விநியோகஸ்தர்களிடமிருந்து இந்த இணைப்புகளை அவர் வைத்துள்ளார்.

ரொம்ப தூரத்தில் பிற அமைச்சர்கள்
கோகுல இந்திராவுடன் ஒப்பிடுகையில் மற்ற அமைச்சர்கள் எல்லாம் ரொம்ப தூரத்தில் உள்ளனர். அவர்கள் அனைவருமே சராசரியாக 16 சிலிண்டர்கள் வரைதான் வாங்கியுள்ளனர்.

புக் பண்ணினா உடனே டெலிவரி
கோகுல இந்திரா, ஜெயலலிதா போன்ற இந்த விவிஐபிகளுக்கு புக் செய்தவுடனேயே கொண்டு போய் சிலிண்டரைக் கொடுத்துள்ளனராம் கேஸ் ஏஜென்சி புண்ணியவான்கள். அப்பாவி பொதுமக்கள் பல நாட்கள், வாரக் கணக்கில் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலகிருஷ்ணன் என்ற ஆர்டிஐ சேவகர்தான் இந்தத் தகவல்களை வெளிக்கொணர்ந்து கொடுத்திருக்கிறார். இவரது வீட்டை நோக்கி 'ஆட்டோக்கள்' பாயாமல் இருந்தால் சரிதான்...!!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications