ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: கோர்ட்டில் கேள்விகளுக்கு பதிலளித்த சசிகலா

Subscribe to Oneindia Tamil

Sasikala
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான சசிகலாவிடம் நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்கப்பட்டு பதில் பெறப்பட்டன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பல இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓய்வுபெற்றுவிட்டார். புதிய நீதிபதி பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றிருக்கிறார். அரசுத் தரப்பு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யாவும் ராஜினாமா செய்துவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு புதிய நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது சசிகலா ஆஜராகவில்லை. இதனால் கடுப்பாகிப் போன அவர் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். இதைத் தொடர்ந்து கடந்த வாரம் நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராகியிருந்தார். அப்போது சில ஆவணங்களைக் கோரி சசிகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நதிபதி இன்று வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

இன்றைய விசாரணையின் போது 313-வது பிரிவின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு சசிகலா பதிலளிக்கவும் அவர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜரான சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது, ஞாபகமில்லை என்றே தமிழில் சசிகலா கூறினார். இதை மொழிபெயர்க்கப்பட்டு நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

மதிய உணவு இடைவேளைவரை மொத்தம் 103 கேள்விகளுக்கு சசிகலா பதிலளித்தார். அதன் பிறகும் தொடர்ந்து சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+