அம்மா நான் வாழ விரும்புகிறேன்: ஓடும் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்ட டெல்லி பெண்

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டார். டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று 5வது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த கும்பல் அவரை இரும்புக் கம்பியால் தாக்கியதில் அவரது குடல் பெரிதும் சேதமடைந்தது. இதையடுத்து
நேற்று காலை அவருக்கு 5வது முறையாக அறுவை சிகிச்சை செய்து குடல் பகுதியில் 15 இன்ச் அளவு நீக்கப்பட்டது.
முன்னதாக அந்த மாணவி ஒரு துண்டுச் சீட்டில் தான் வாழ விரும்புவதாக எழுதி தனது தாயிடம் காண்பித்துள்ளார். அறுவை சிகிச்சைப் பிறகும் அவரது உடல் நிலை மோசமாகத் தான் உள்ளது. அறுவை சிகிச்சை செய்யும் அறைக்கு அழைத்துச் செல்லும் முன்பு அவர் தனது தாய் மற்றும் சகோதரனுடன் பேசியுள்ளார். ஆனால் அவரது தந்தை அவரைப் பார்த்து பேசவில்லை.
அவரது குடல் பகுதி பெரும் சேதம் அடைந்திருப்பதால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் நரம்புகள் வழியாகத் தான் உணவு ஏற்ற வேண்டும். ஆனால் அது முக்கியமில்லை. தற்போது அவரது உயிரைக் காப்பாற்றவே போராடுகிறோம் என்று டாக்டர் அத்தானி தெரிவித்தார்.
முன்னதாக கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் அந்த கும்பலில் தன்னுடன் இருந்த ஒருவர் அப்பெண்ணின் வயிற்றில் இருந்து கயிறு போன்ற ஒன்றை உருவியதாகத் தெரிவித்தார். அது கயிறல்ல அப்பெண்ணின் குடல் என்று நினைக்கிறேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications