தலித் இளைஞர் படுகொலை: ஜி. ராமகிருஷ்ணன் கடும் கண்டனம்
சென்னை: தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்ற தலித் இளைஞன் கடந்த ஒரு வார காலமாக காணவில்லை என அவரது குடும்பத்தின் சார்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்து ஹேபியஸ் கார்பஸ் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சாதிய சக்திகளால் அவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மேலும் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள ஏரியின் அருகே கோபாலகிருஷ்ணனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நடைபெற்ற இப்படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இப்படுகொலையைச் செய்தவர்களை உடனடியாக கைது செய்து, இத்தகைய நிகழ்வுகளுக்குப் பின்னணியாக உள்ளவர்களையும் கண்டறிந்து கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை கட்சி வலியுறுத்துகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications