கொமுக தலைவர் நான் தான்: பெஸ்ட் ராமசாமி அறிவிப்பு
கோவை: கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமி அறிவித்துள்ளார்.
கொங்குநாடு முன்னேற்றக் கழகம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் ஒரு பிரிவும், அதன் தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமையில் ஒரு பிரிவுமாக செயல்படுகிறது. இந்நிலையில் பெஸ்ட் ராமசாமியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார் ஈஸ்வரன். அதே போல பெஸ்ட் ராமசாமி தரப்பு ஈஸ்வரனை கட்சி பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக அறிவித்தது.
இந்த நிலையில் நாங்கள் தான் உண்மையான கொங்குநாடு முன்னேற்றக் கழகம் என்று பெஸ்ட் ராமசாமி தலைமையில் இயங்கி வரும் அணி அறிவித்துள்ளது.
மேலும், நேற்று பெருந்துறையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் தலைவராக தன்னையும், பொதுச் செயலாளராக நாகராஜ் என்பவரையும், பொருளாளராக கண்ணனும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பெஸ்ட் ராமசாமி அறிவித்துள்ளார்.
இதனால் கொஞ்சம் காலம் அடங்கியிருந்த கொமுக விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications
