அவள் வருவாளா?..... மனைவிக்காக மரத்தின் மீது காத்திருக்கும் கணவன்!
மும்பை: தான் கட்டிய மனைவியை அடுத்தவனுடன் பார்த்தால் வெட்டிப்போடும் கணவர்கள் இருக்கிறார்கள். எக்கேடோ கெட்டுப்போ என்று தண்ணீர் தெளித்து விடும் கணவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் அடுத்தவனை நினைத்துக்கொண்டு அம்மாவின் வீட்டில் இருக்கும் மனைவி மனம் திருந்தி வருவாள் என்று மரத்தின் மீது காத்துக்கொண்டிருக்கிறார் ஒரு கணவர். இந்தியாவில்தான் இந்த அதிசய கணவர் வசித்து வருகிறார்.
ஒன்பது மாதங்களாக, மரத்தில் உட்கார்ந்து போராட்டம் நடத்தி வரும் அந்த அதிசய கணவரைப் பார்க்க, ஏராளமானோர் வந்த வண்ணமாக உள்ளனர்.எனினும், அவரது மனைவி மட்டும் மனம் மாறவேயில்லை. அந்த அதிசய கணவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.
வாரணாசி டூ மும்பை
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள ராம்காவ் என்ற இடத்தை சேர்ந்தவர், சஞ்சய், 25. இவர் மனைவி, தாரா, 22. சஞ்சய்க்கு, வாரணாசியில் வேலை சரிவர கிடைக்காததால், மனைவி தாராவுடன், மும்பை சென்றார். அங்கு கிடைத்த வேலையை பார்த்துவிட்டு இரவில் வீடு திரும்புவார் சஞ்சய்.
பக்கத்து வீட்டுக்காரருடன்
ஒரு நாள் வேலை பார்த்துவிட்டு வழக்கமாக வரும் நேரத்திற்கு முன்னதாகவே, வீடு திரும்பினார் சஞ்சய். கதவை திறந்தவருக்கு கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனைவி தாரா, பக்கத்து வீட்டு வாலிபருடன், படுக்கையில் இருந்தார்.
மும்பை டூ வாரணாசி
இந்த செயலால் மனம் நொந்த சஞ்சய், தாராவை கண்டித்தார். பின்னர் மும்பையை விட்டு மனைவியுடன் சொந்த ஊரான வாரணாசி திரும்பினார். அங்கு சென்ற பிறகும், தம்பதிக்குள் சந்தோசம் இல்லை.
அம்மா வீட்டில் வாசம்
மும்பை வாலிபரின் நினைவாகவே, தாரா இருக்கவே அவளின் தாய் வீட்டில் விட்டு வந்த சஞ்சய், மனைவி மனம் மாற வேண்டும் என அறிவுறுத்தினார். ஆனாலும் தாராவின் மனம் மாறவில்லை.
மரத்தில் ஏறிய சஞ்சய்
இதனால் கோபம் கொண்ட சஞ்சய், அவர்கள் வசிக்கும் ஊரின் வெளிப்பகுதியில் இருந்த, மரம் ஒன்றில் ஏறி உட்கார்ந்து கொண்டார். மரத்தை விட்டே கீழே இறங்குவதில்லை. சாப்பிடுவதும் உறங்குவதும் கூட மரத்தில்தான். இதனை அறிந்த சஞ்சயின் உறவினர்கள், அவர் மனைவி, தாராவிடம் பேசிப்பார்த்தனர். அவளும் மனம் மாறவில்லை; சஞ்சயும், தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.
ஒன்பது மாத போராட்டம்
மார்ச், 9ம் தேதி, மரத்தில் ஏறிய சஞ்சய், ஒன்பது மாதங்களாக, தன் போராட்டத்தை கைவிடவில்லை. ஆட்கள் யாரும் அருகில் இல்லாத நேரத்தில், மரத்திலிருந்து கீழே இறங்கி, உபாதைகளை கழித்துவிட்டு பிறகு ஏறி உட்கார்ந்து கொள்கிறார். வலுக்கட்டாயமாக யாராவது தன்னை இறக்க முயன்றால் தான் தற்கொலை செய்து கொள்வேன்' என, மிரட்டுகிறார். அவரது போராட்டம் ஒன்பது மாதமாக தொடர்கிறது.
குவியும் கூட்டம்
மனைவி மனம் திருந்த வேண்டி, மரத்தில் உட்கார்ந்து போராட்டம் நடத்தி வரும் சஞ்சயை பார்க்க, ஏராளமானோர் வந்த வண்ணமாக உள்ளனர். எனினும், அவர் மனைவி தாரா மட்டும் மனம் மாறவேயில்லை. மும்பை வாலிபனை மறந்துவிட்டு தனக்காக போராட்டம் நடத்தும் கணவனை சமாதானப்படுத்தாமல் தன் தாய் வீட்டில் தனித்தே வாழ்கிறாள் தாரா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications