Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்களுக்கு எந்த மதமும் இல்லை… உலக அளவில் 110 கோடி பேர் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பள்ளிப் பருவத்தில் தொடங்கி ஒவ்வொரு கால கட்டத்திலும் மதம் பற்றிய நம்பிக்கைகள் மனிதர்களுக்கு ஏற்படுத்தப்படுகின்றன. இந்து, கிருஸ்துவம், இஸ்லாமியம், சீக்கியம், புத்தமதம், ஜைனம் உள்ளிட்ட எத்தனையோ மதங்கள் உலகில் உள்ளன.

ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு மதத்தை பின்பற்றுவார்கள். அதற்குரிய கடவுளை வணங்குவார்கள். ஆனால் உலகில் 110 கோடி பேர் எந்த மதத்தையும் சாராதவர்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் உள்ள ஓர் அமைப்பு உலகம் முழுக்க மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பேவ் (BEW) பேரவை அமைப்பு உலக அளவில் மதரீதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது. அதில் சுவரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.

கிருஸ்துவர்கள் நம்பர் 1

கிருஸ்துவர்கள் நம்பர் 1

உலக அளவில் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள் 220 கோடி பேர் உள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 32 சதவிகிதமாகும். அவர்களே நம்பர் ஒன் இடத்தை பெற்றுள்ளனர். உலகில் 157 நாடுகளில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்றனர்.

இஸ்லாமியர்கள் இரண்டாம் இடம்

இஸ்லாமியர்கள் இரண்டாம் இடம்

இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் உலக அளவில் 160 கோடி பேர் உள்ளனர். இஸ்லாமிய சமயத்தவர்கள் 2-வது இடத்தில் உள்ளனர். உலகில் 10 நாடுகளில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் அதிகமாக உள்ள நாடு இந்தியா.

எந்த மதமும் இல்லை

எந்த மதமும் இல்லை

உலக அளவில் 6ல் ஒருவர் எந்த மதத்தையும் சாராதவர்கள் இருக்கின்றனர். அதாவது உலக மக்கள் தொகையில் 110 கோடிபேர் எல்லா மதமும் எம்மதம். எதுவும் சம்மதம் என்ற நிலையில் இருக்கின்றனர்.

100 கோடி இந்துக்கள்

100 கோடி இந்துக்கள்

உலகில் 100 கோடி மக்கள் இந்து மதத்தை பின்பற்றுவதாக பேவ் அமைப்பு கூறியுள்ளது. இந்த ஆய்வில் இந்து மதத்துக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது. உலகில் மொத்தம் 15 சதவிகிதம் பேர் இந்து மதத்தை பின்பற்றுகின்றனர். இவர்களில் 97 சதவீதம் பேர் இந்தியா, நேபாளம், மொரிசியஸ் நாடுகளில் வாழ்கின்றனர். இந்துக்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே ஆசியா மற்றும் பசிபிக் கண்டங்களுக்கு வெளியே வாழ்கின்றனர்.

50 கோடி மக்கள் புத்தமதம்

50 கோடி மக்கள் புத்தமதம்

இவர்களைத் தவிர புத்த மதத்தினர் 7 சதவீதம் பேரும் (50 கோடி), யூதர்கள் 0.2 சதவீதம் பேரும் (1.4கோடி) உள்ளனர். பகாய், ஜெயின், சீக்கியம், தாவோ, டென்ரிகோ, விக்கா, ஜோரோஸ்ட்ரியன், டோமேன்ஷன் போன்ற பிற மதங்களை பின்பற்றுபவர்கள் 5.8 கோடிப் பேர். இவர்களைத் தவிர, 40 கோடிப் பேர் அதாவது உலக அளவில் 6 சதவீதம் பேர் மரபு வழி அல்லது பாரம்பரிய மதங்களைப் பின்பற்றுகின்றனர்.

இந்தியாவில் சிறுபான்மையினர்

இந்தியாவில் சிறுபான்மையினர்

உலக முஸ்லிம் மக்கள் தொகையில் 13 சதவீதம் முஸ்லிம்கள் இந்தோனேஷியாவிலும், 11 சதவீதம் பேர் இந்தியாவிலும் வாழ்கின்றனர். எனினும், இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர். பாகிஸ்தான் (11 சதவீதம்), வங்கதேசம் (8சதவீதம்), நைஜீரியா(5 சதவீதம்), ஈரான்(5சதவீதம்), எகிப்து(5 சதவீதம்), துருக்கி(5 சதவீதம்), அல்ஜீரியா(2சதவீதம்), மொராக்கோ (2சதவீதம்) ஆகிய நாடுகளிலும் முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர்.

பிற மதத்தவர்கள் அதிகம்

பிற மதத்தவர்கள் அதிகம்

இந்துக்கள் தவிர பிற மதத்தவர் அதிகளவில் உள்ளதும் இந்தியாவில் தான். இந்தியாவுக்கு வெளியே பிற மதத்தவர்கள் அதிகமாக வாழும் நாடுகள் சீனா(16 சதவீதம்), ஜப்பான்(10 சதவீதம்), தைவான்(7 சதவீதம்) வடகொரியா(5 சதவீதம்), அமெரிக்கா(3சதவீதம்) என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+