அமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கி சூட்டு சம்பவம்- 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: அமெரிக்காவில் பள்ளிக்கூடத்தில் நுழைந்து 20 குழந்தைகள் உட்பட 27 பேரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்து ஒருவாரத்தில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்கிறது.
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் தொடக்க பள்ளியில் நுழைந்த நபர் 20 குழந்தைகள் உள்பட 27 பேர் பலியாகினர். இதனால் துப்பாக்கி வைத்திருக்கும் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்ற குரல் அதிகரித்தது.
இந்நிலையில் பென்சில் வேனியா மாகாணத்தின் உள்ள கீசிடவுன் பகுதியில் நேற்று மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 4 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூட்டை தடுத்த போலீஸ் அதிகாரிகளும் சுடப்பட்டனர்.
அடுத்தடுத்த துப்பாக்கிச் சூட்டால் அமெரிக்கா அதிர்ச்சியடைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications