சட்டசபையில் ஆபாச படம் பார்த்து இந்தியர்களை அதிர வைத்த கர்நாடக அமைச்சர்கள்

கர்நாடக சட்டசபை கூட்டம் விதான சௌதாவில் கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி நடந்து கொண்டிருந்தது. சபை நிகழ்வுகளை தூர்தர்ஷன் மற்றும் பல்வேறு தனியார் டிவி சேனல்களும் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தன. அப்போது சட்டசபையில் முன் வரிசையில் அமர்ந்திருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் லக்ஷ்மன் சாவாதி தனது செல்போனில் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். இதை தனியார் சேனலின் கேமராமேன் அப்படியே 'ஜூம்' செய்ய, ஒரு கருப்பு சேலை அணிந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக உடைகளைக் கழற்றி எறியும் காட்சிகள் வந்தன. அதைத் தொடர்ந்து இன்னொரு வீடியோவில் ஒரு பெண்ணும் சில ஆண்களும் உடலுறவில் ஈடுபடும் காட்சிகளும் வந்தன. இதை அமைச்சர் லக்ஷ்மன் சாவாதியும் அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டில் ஆகியோரும் பார்த்து ரசிக்கின்றனர். மேலும் சுற்றுச் சூழல் துறை மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் கிருஷ்ணா பாலிமரும் இதை எட்டிப் பார்க்கிறார்.
சட்டசபை நடந்து கொண்டிருந்தபோதே கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் இந்த வீடியோவை அமைச்சர்கள் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தனர். அமைச்சர்களின் இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சாவாதி செய்தியாளர்களிடம் கூறுகையில், அது என்னுடைய செல்போனே அல்ல. அது அமைச்சர் பாலிமாருடையது. அது ஒன்றும் ஆபாச வீடியோ இல்லை. ஒரு வெளிநாட்டில் ஒரு பார்ட்டியில் பெண்ணை பலர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொல்லும் வீடியோவைக் காட்டினார். கர்நாடகத்திலும் அது போன்ற பார்ட்டிகள் நடப்பதும், இதனால் நமது கலாச்சாரம் கெடுவதும் குறித்து கவலைப்பட்ட நான் அந்த வீடியோவைப் பார்த்தேன். உண்மையில் அது ஆபாச வீடியோவே அல்ல என்றார்.
ஆனால், அது ஒரு புளு பிலிம் வீடியோ என்பதும், ஒரு பிளாக் ஸ்பாட்டில் இருந்து டெளன்லோட் செய்யப்பட்டது என்பதையும் தொலைக்காட்சிகள் விவரமாக சுட்டிக் காட்டின. இந்நிலையில் அது என்னுடைய செல்போன் அல்ல என்று அமைச்சர் பாலிமார் கூறியுள்ளார். இதையடுத்து பாஜக தலைவர் நிதின் கட்காரி அந்த மூன்று அமைச்சர்களையும் பதவி விலகுமாறு கூறினார். அதன்படி அவர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications