பலாத்கார சம்பவம்- 3 பெண்களின் தந்தையான எனக்கும் கோபம்தான்: மன்மோகன்சிங்

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிகோரி கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லி போர்க்களமாக காட்சி அளிக்கிறது. தொடர்ச்சியான போராட்டங்களும் அதை ஒடுக்க போலீசார் கடும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. டிசம்பர் 16-ந் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு, நானும், எனது குடும்பத்தாரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
3 பெண்களுக்கு தந்தை என்ற முறையில், இந்த கொடுமையான சம்பவத்தால் எனக்கும் கோபம் எழுகிறது. உங்களது வருத்தத்தில், நானும், எனது மனைவியும், குடும்பமும் பங்கு கொள்கிறது. இதுபோன்ற கொடுமையான குற்றத்தை செய்த குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத் தருவதில் உறுதியாக இருக்கிறோம்.
சிகிச்சை பெற்று வரும் மாணவியின் உடல்நிலையை தொடர்ந்து அரசு கவனித்து வருகிறது. ஆனால், இந்த குற்றச்செயல்களுக்காக கோபம் ஏற்படுவது இயல்புதான். அதற்காக போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது. வன்முறை எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது. எனவே, வன்முறையைக் கைவிட்டு அமைதியை நிலைநாட்டுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்..
முன்னதாக நேற்று இரவு பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கடந்த ஞாயிறன்று கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக போராட்டம் நடத்தியவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்துள்ள மோதல்கள் கவலையளிக்கின்றது.
அந்த இளம்பெண்ணுக்கு டெல்லியில் ஏற்பட்ட இந்த கொடூரமான அனுபவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதில், நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். இச்சம்பவத்தினால் ஏற்பட்டுள்ள கோபமும், ஆவேசமும் நியாயமானது. உண்மையானது. அந்த பெண்ணுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம்.
இந்த இக்கட்டான நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்காகவும் அவருடைய அன்பிற்குரியவர்களுக்காகவும் நாம் பிராத்தனை செய்வோம். இவ்விவகாரத்தில் மக்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications