டெல்லி போராட்டம்- பிரதமர் உரையில் பாஜக அதிருப்தி- இன்று ஆலோசனை
டெல்லி: பாலியல் பலாத்கார சம்பவத்தில் நீதி கோரி தொடர் போராட்டங்கள் நடைபெறும் நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் அளித்த விளக்கத்தை பாரதிய ஜனதா கட்சி நிராகரித்திருக்கிறது. மேலும் இந்த விவகாரத்தில் அடுத்து மேற்கொள்ள என்ன செய்வது என்பது பற்றி பாஜக மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
பலாத்கார சம்பவத்துக்கு நீதி கோரி டெல்லியை போர்க்களமாக்கினர் மாணவர்கள்! இந்தியா கேட் பகுதியே களேபரபூமியானது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு பொதுமக்கள் அமைதி காக்க பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் பின்னர் இன்று காலை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலமும் உரையாற்றியிருந்தார். 3 பெண்களின் தந்தையான தமக்கு அனைவரையும்விட கோபம் அதிகம்தான் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் பிரதமர் மன்மோகன்சிங்கின் இந்த அறிக்கையை பாஜக நிராகரித்திருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர், பிரதமர் மக்களின் கோபத்தைப் புரிந்து கொள்ளவில்லை. பிரதமரின் பேச்சில் எந்த ஒரு உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து பாஜகவின் மேலிடத் தலைவர்கள் இன்று இந்த விவகாரம் குறித்து விவாதிக்க இருக்கின்றனர். ஏற்கெனவே கற்பழிப்புக் குற்றங்களுக்கான சட்டத்தை கடுமையாக்குவது தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பாஜகவின் மக்களவைத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியிருந்தார். இன்றைய கூட்டத்தில் இது தொடர்பாகவும் விவாதிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications