திரிபுராவில் இளம்பெண்ணை கற்பழித்து, நிர்வாணமாக்கி தாக்கி, மரத்தில் கட்டி வைத்த கும்பல்
அகர்தலா: திரிபுராவில் 37 வயது குடும்பத் தலைவி ஒருவரை ஒரு கும்பல் கற்பழித்து அவரை நிர்வாணமாக்கி அனைவர் முன்பும் அடித்து, மரத்தில் கட்டி வைத்துள்ளது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு மாணவி கற்பழிக்கப்பட்டதற்கு நியாயம் கேட்டு தலைநகரில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் திரிபுராவில் 5 வயது குழந்தையின் தாயை ஒரு கும்பல் கற்பழித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு திரிபுராவில் உள்ள பிஷால்கரைச் சேர்ந்த 37 வயது குடும்பத் தலைவியை ஒரு கும்பல் கற்பழித்தது. மேலும் அவரை நிர்வாணமாக்கி ஊர் மக்கள் முன்பு அடித்து நொறுக்கியது.
அதோடு மட்டுமல்லாமல் அந்த பெண்ணை நிர்வாண கோலத்தில் மரத்தில் கட்டி வைத்துள்ளது. அவர் அதே நிலையில் பல மணி நேரம் இருந்தும் அவரை யாரும் காப்பாற்ற வரவில்லை. பின்னர் அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் 7 பேரைக் கைது செய்தனர், 3 பேரை தேடி வருகின்றனர். மேலும் அப்பெண்ணின் கணவர் அந்நேரத்தில் எங்கே சென்றார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், அந்த கும்பல் அப்பெண்ணை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து பெண்கள் உள்பட பலர் முன்பு கற்பழித்துள்ளனர். ஆனால் ஒருவர் கூட அவரைக் காப்பாற்றவில்லை என்றனர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து பிஷால்கரில் கண்டனப் பேரணி நடந்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications