வன்முறை வேண்டாம்... என் மகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.. - பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை

டெல்லியில், ஓடும் பஸ்சில் ஆறு நபர்களால் கொடூரமாக தாக்கி கற்பழிக்கப்பட்டு, சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவியின் தந்தை, நேற்றிரவு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அதில், "என் மகளின் உடல்நிலை தற்போது நிலையாக உள்ளது. அவர் சுய உணர்வுடன் இருக்கின்றார். என் மகளுக்கு நியாயம் கிடைப்பதற்காக போராட்டம் நடத்துபவர்களுக்கு நன்றி. ஆனால் இந்தப் போராட்டம் வன்முறையாக மாறுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை.
குற்றவாளிகளை கைதுசெய்து, சட்டத்தின் முன்நிறுத்தி, தண்டனை வாங்கித்தரும் போலீசாரின் முயற்சி வெற்றிபெற அனைவரும் உதவிட வேண்டும்.
உயிர் வாழவும், போராடவும் தேவையான மனதிடம் என் மகளுக்கு இன்னும் அப்படியே உள்ளது. அவள் நலமடைய கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள். வன்முறையில் ஈடுபட வேண்டாம். நமது கோரிக்கையை நாம் அமைதியான முறையில் முன்னெடுத்துச் செல்வோம்.
என்மகள் எவ்வளவு தைரியமானவள் என்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. உங்கள் அன்பும் ஆதரவும் அவள் மனதிடத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது," என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
ஸ்தம்பித்த டெல்லி.. இனி இளைஞர்கள் பயப்படமாட்டார்கள்.. CJP பதிவால் மத்திய அரசு ஷாக்! -
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
CJP Protest LIVE: அடுத்தக்கட்ட போரட்டத்தை அறிவித்த கரப்பான் பூச்சி கட்சி! பாஜகவுக்கு நெருக்கடி -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா











Click it and Unblock the Notifications