தூத்துக்குடி: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவி குடும்பத்துக்கு ரூ1 லட்சம் நிவாரணம்- ஜெ.

சென்னை: தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவி புனிதாவின் குடும்பத்துக்கு ரூ1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
புனிதா குடும்பத்துக்கு...
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவரின் மகள் மாணவி புனிதா 20.12.2012 அன்று பாலியல் பலாத்கார முயற்சிக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
யானை தாக்கியோர் குடும்பத்துக்கு
இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், டி.கொத்தனூர் தரப்பு, நார்த்தனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாப்பையன் என்பவரின் மகன் முனுசாமி 23.12.2012 அன்று ஓசூர் வட்டம், பார்த்தகோட்டா கிராமம் அருகே காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்; கோயம்புத்தூர் மாவட்டம், எட்டிமடை கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி ராமாத்தாள் 23.12.2012 அன்று சொரிமலை காப்புக் காடு அருகே காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். மரணமடைந்த முனுசாமி மற்றும் ராமாத்தாள் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு வனத்துறை மூலம் தலா மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications