விமானத் தாக்குதலில் தலிபான் தலைவரைக் கொன்றாரா இளவரசர் ஹாரி?

இங்கிலாந்து மீடியாக்கள் இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளன. 27 வயதான ஹாரி, இங்கிலாந்து வி்மானப்படையில் பணியாற்றுகிறார். தற்போது அவர் ஆப்கானிஸ்தான் பணியில் ஈடுபட்டுள்ளார். நேட்டோ படையில் இணைந்து செயல்பட்டு வரும் ஹாரி, முதல் முறையாக விமானத் தாக்குதலில் ஈடுபட்டார் என்றும், அதில் ஒரு முக்கிய தலிபான் தலைவரைக் கொன்றுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
ஒரு அப்பாச்சி ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்ற ஹாரி, அங்கு 100 எல்பி ஹெல்பையர் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு விமானத் தாக்குதலில் ஹாரி ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும். மேலும் முதல் தாக்குதலிலேயே அவர் தலிபான் தலைவர் ஒருவரைக் கொன்றதாக செய்திகள் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் அக்டோபர் மாதம் இறுதியில் நடந்ததாக டெய்லி மெயில் செய்தி தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஹாரி யாரைக் கொன்றார் என்பது குறித்து எந்தத் தகவலையும் இங்கிலாந்து விமானப்படையோ, ராணுவமோ இதுவரை தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications
