டெல்லி பலாத்கார எதிர்ப்புப் போராட்டத்தில் காயமடைந்த போலீஸ்காரர் மரணம்

Subscribe to Oneindia Tamil

Subhash Tomar
டெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் தாக்கியதில் காயமடைந்ததாக கூறப்படும் காவலர் சுபாஷ் தோமர் மரணமடைந்தார்.

இன்று காலை டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தின்போது தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்தார்.

இந்தியா கேட் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து பலத்த காயத்துடன் அவரை மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்றுகாலை உயிரிழந்தார்.

போராட்டக்காரர்கள் இவரை சரமாரியாக சூழ்ந்து கொண்டு கற்களை வீசியும், தாக்கியும் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் போராட்டக்காரர்கள் இதை மறுத்துள்ளனர். இதுதொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+