ரூ 27 லட்சம் பணமோசடி: திமுக பிரமுகர் ஒச்சுபாலு திடீர் கைது
மதுரை: மதுரை அருகே வேலை வாங்கி தருவதாக கூறி 27 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தி.மு.க. பிரமுகர் ஒச்சுபாலுவை போலீசார் கைது செய்தனர்.
மதுரை 3-ம் பகுதி தி.மு.க. செயலாளராக இருப்பவர் ஒச்சுபாலு. இவர் கடந்த 2010-ம் ஆண்டு மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த வீரசேகரன் என்பவருக்கு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 15 லட்சமும், சிவகங்கை மாவட்டம் கீழயடி பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர் மகன் சுப்பிரமணியிடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் வாங்கியதாகவும், மதுரையை சேர்ந்த பால் ராஜ் மகன் அரியமுத்து (25) என்பவரிடம் மாநகராட்சியில் டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சமும் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் ஆட்சியும் மாறிவிட்டது. வேலையும் கிடைத்தபாடில்லை. இதனால் பணத்தை திருப்பி தருமாறு சம்பந்தப்பட்டவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு ஒச்சுபாலு காசோலையை கொடுத்துள்ளார். ஆனால் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. இதைத்தொடர்ந்து தங்களை ஒச்சுபாலு மோசடி செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.எஸ்.காலனி போலீசில் 3 பேரும் புகார் செய்தனர்.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஒச்சு பாலுவை நேற்றிரவு கைது செய்தனர்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு












Click it and Unblock the Notifications