பாமகவினர் கொலை மிரட்டல்: காதல் ஜோடி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்
சென்னை: கலப்புத்திருமணம் செய்த தங்களை கொலை செய்து விடுவதாக பாமகவினர் மிரட்டி வருவதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த இளம் தம்பதியினர் இன்று புகார் அளித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் படைத்தலைவன்குடி கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் மகள் வினோதா (22).இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரை காதலித்து வந்தார். சிறு வயதிலிருந்தே இருவரும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர். வினோதா ஆசிரியை பயிற்சி படிப்பை முடித்துள்ளார்.தேவேந்திரன் ஓட்டல் மேனேஜ்மெண்ட் முடித்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், வினோதாவின் வீட்டில் இக்காதல் திருமணத்தை கடுமையாக எதிர்த்துள்ளனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனால் இருவரும் சொந்த ஊரை விட்டு சென்னை வந்து,தேனாம்பேட்டையில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் வினோதாவும், தேவேந்திரனும் இன்று மதியம் 12 மணியளவில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சம் புகுந்து,புகார் மனு அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:
எனது கணவர் இந்து ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்.நான் இந்து படையாச்சி சமூகத்தைச் சேர்ந்தவர்.நாங்கள் திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல் எனது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்களை மிரட்டி வருகிறார்கள்.
எனது கணவரை விட்டு பிரிந்து வராவிட்டால் இருவரையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள். கும்பகோணத்தைச் சேர்ந்த ரவுடி முருகன், எனது மாமா கிருஷ்ணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. தவமணி ஆகியோர் எனது கணவரின் குடும்பத்தாரை சந்தித்து மிரட்டியுள்ளனர்.
எங்கள் ஜாதி பெண்ணை திரும்ப ஒப்படைக்கவில்லை என்றால் சேத்தியாதோப்பு பகுதியில் நடந்தது போல உங்களை கொலை செய்து விடுவோம். வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு இதற்கான உத்தரவை போட்டுள்ளார் என்று கூறி 10-க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் எனது கணவரின் உறவினர்களை மிரட்டி வருகிறது.
மேற்கண்ட நபர்களால் எங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாமக நிறுவனர் ராமதாஸ், காடுவெட்டி குரு ஆகியோர் காதலுக்கு எதிராக பகிரங்கமாக பேசிவருகின்றனர். இந்தநிலையில் கலப்புத்திருமணம் செய்த இளம் ஜோடி முதன் முறையாக புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications