இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை - தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஜெருசலேம்/சென்னை: உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸை முன்னிட்டு தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
கிறிஸ்தவர்களின் இறைவனான ஏசுநாதர் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்த நாளை முன்னிட்டு கடந்த பல நாட்களாகவே கிறிஸ்தவர்களின் தேவாலயங்களிலும், வீடுகளிலும் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, நட்சத்திரங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. இதேபோல ஏசுநாதர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்பதை குறிக்கும் விதமான குடில்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ தேவால்யாங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நாள் முழுவதும் நடக்கின்றன. நள்ளிரவு தொடங்கி, அதிகாலை மற்றும் நாள் முழுவதும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.
ஏசுநாதர் பிறந்த பெத்லேகமில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி வழிபாடு நடத்தினர் . வாடிகனிலும் சிறப்பு பிரார்த்தனைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சென்னை சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா தேவாலயம் போன்றவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோலாகலமாக பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தேவாலயங்களில் மட்டுமின்றி பெரும் வணிக வளாகங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அரங்கேறின. நாகப்பட்டினம் வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் வெளிநாடுகளில் இருந்து பலரும் கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்காக குவிந்திருக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications