துரை தயாநிதிக்கு சம்மன்: விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
மதுரை: கிரானைட் குவாரி மோசடி வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தமிழ்நாடு கனிம வளத்துக்கு சொந்தமான இடத்தில் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் சட்டவிரோதமான முறையில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தனர் என்பது புகார்.
இது தொடர்பாக கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதன் முன்னாள் பங்குதாரரான துரை தயாநிதி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குக்காக முன் ஜாமீன் பெற்றுள்ளார் துரை தயாநிதி. அதில், கீழவளவு காவல்நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விசாரணைக்கு வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மதுரை ஊரக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு துரை தயாநிதிக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கையெழுத்திட வந்த துரை தயாநிதியிடம் மேலூர் காவல்துறை ஆய்வாளர் ஆவுடையப்பன் சம்மனை அளித்தார். அதை அவர் பெற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications