ஜெ.வை அவமதித்திருந்தால் கண்டனம்..மத்திய அரசு செயலும் வழக்கமானதே!: கருணாநிதி ‘வியாக்யானம்’!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, ஜெயலலிதாவை அவமானப்படுத்தியிருந்தால் அதை நான் கண்டிக்கிறேன். ஆனால் நடந்தது என்ன என்பதை விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக நான் பல முதலமைச்சர்கள் மாநாடுகளுக்கும், தேசிய வளர்ச்சிக் குழு கூட்டங்களுக்கும் சென்றிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் முதலமைச்சர்கள் தங்களுடைய பேச்சுக்களை விரிவாக அச்சடித்து புத்தகமாக மேஜைகளில் முன்பாகவே வைத்து விடுவார்கள். அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நேரம் வரையில் படிப்பார்கள். மீதமுள்ள பகுதிகளை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வார்கள். அப்படித் தான் முதலமைச்சர்கள் மாநாட்டில் பழக்கம். நானும் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து அந்தப் பழக்கத்தை டெல்லியில் பார்த்திருக்கிறேன்.
ஆனால் இவர் வித்தியாசமாக நடந்து கொண்டிருக்கிறார். முதலில் தான் பேச வேண்டுமென்றும், சென்னைக்குத் திரும்ப வேண்டுமென்றும் நம்முடைய முதல் அமைச்சர் சொன்னதின் பேரில் முதலில் பேசுமாறு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எல்லா முதல் அமைச்சர்களுக்கும் பத்து நிமிடம் என்று எப்போதும் போல சொல்லப்பட்டிருக்கிறது. பத்து நிமிடம் முடிந்த பிறகு இதுபோன்ற கூட்டங்களில் பேசும்போது ஒரு அடையாள மணி அடிப்பார்கள். அவ்வாறு மணி அடித்தவுடன் பேச்சினை முடித்து விட வேண்டும் என்பது அல்ல. அதற்கு மேல் ஐந்து நிமிடம் இன்னும் சொல்லப் போனால் பத்து நிமிடம் கூட முதலமைச்சர்கள் பேசுவது உண்டு. நானும் அப்படிப் பேசியிருக்கிறேன். நேரம் இருக்கிற வரை பேசிவிட்டு, மீதப் பகுதிகளை பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டு பத்திரிகைகளுக்கு முழு பேச்சினையும் அளித்து விடலாம். இது தான் நடைமுறை என்று மத்திய அரசுக்கு ஆதரவாகவும் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications