கேஸ் ஏஜென்சிகள் முறைகேடு: மானிய விலை சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல்

குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, இனி, மானிய விலையில் வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. செப்., 14ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த அறிவிப்பின்படி, மார்ச், 31ம் தேதி வரையிலான, நடப்பு நிதியாண்டில், மூன்று சிலிண்டர்களை மட்டும், மானிய விலையில் நுகர்வோர் பெற முடியும்."மானிய விலை காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை, செப்., 14ம் தேதி மற்றும் அதற்கு பின், போடப்படும் ரசீதுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட வேண்டும்' என, மத்திய அரசு, தெளிவாக அறிவித்துள்ளது.
ஆனால், காஸ் சிலிண்டர் வினியோகிக்கும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின், "ஏஜென்சி' நிறுவனங்களில் பெரும்பாலானவை, செப்., 14ம் தேதிக்கு முன் போடப்பட்ட, "பில்' களுக்கான சிலிண்டர்களையும் கணக்கிடு கின்றன.இத்தகைய முறைகேட்டால், நடப்பு நிதியாண்டில், தங்களுக்கு மானிய விலையில், இரு சிலிண்டர்கள் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என, நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் சிலிண்டர் புக் செய்பவர்களிடம் கேஸ் ஏஜென்சி நிறுவன ஊழியர்கள் இனி 900 ரூபாய்க்கு மட்டுமே சிலிண்டர் கிடைக்கும் என்று தெளிவாக கூறுகின்றனர். காரணம் கேட்டால் செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான மானிய சிலிண்டர் முடிந்து விட்டது என்றும் இனி மேல் மானியம் இல்லாத சிலிண்டர் மட்டுமே கிடைக்கும் என்று கூறுகின்றனர். இந்த பதில் நுகர்வோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னையில் முறைகேடு புகார்
மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை கணக்கிடுவதில், ஏஜென்சிகள் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து மானியமில்லாத சிலிண்டர்களை நுகர்வோர்கள் திரும்பக் கொடுத்து வருகின்றனர்.
சென்னை, குரோம்பேட்டையில், "இண்டேன்' நிறுவனத்தின், குறிப்பிட்ட, "ஏஜென்சி'யின் வாடிக்கையாளர்கள், 50க்கும் மேற்பட்டோர், நேற்று, மானிய விலை அல்லாத சிலிண்டரை வாங்க மறுத்துள்ளனர். இதே போல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், சிலிண்டர் வாங்காமல் மக்கள் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். "மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஒன்பதாக உயர்த்த வேண்டும் என்று நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications