'காடுவெட்டி' குருவுக்கு கொலை மிரட்டல்: வி.சி. நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் கடந்த 24ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தர்மபுரி சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் காடுவெட்டி குருவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாகவும் அரியலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் வைத்தி ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளர் இலக்கியதாசன், முன்னாள் மாவட்டச் செயலாளர் கொளஞ்சி என்கிற மாறன் ஆகியோர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
ராமதாஸை கைது செய்யக் கோரி கரூர் அருகே ஆர்பாட்டம்:
இந் நிலையில் தர்மபுரி தலித்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை கைது செய்யக் கோரியும் கரூர் அருகே தலித் விடுதலை இயக்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
கரூர் அருகே உள்ளது அரவக்குறிச்சி. அங்கு தாலுகா அலுவலகம் முன்பு
தர்மபுரி சம்பவத்தை கண்டித்தும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை கைது செய்யக் கோரியும் கரூர் அருகே தலித் விடுதலை இயக்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்திற்கு தலித் விடுதலை இயக்க மாநில செயலாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். கொள்கைபரப்பு செயலாளர் ஆறுமுகம், பரமத்தி ஒன்றிய தலைவர் மணி, மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி பழனிச்சாமி, அரவக்குறிச்சி ஒன்றிய தலைவர் சின்னான் முன்னிலை வகித்தனர்.
பொதுச்செயலாளர் ஞானசேகரன், துணை பொதுச்செயலாளர் கருப்பையா, மாநில இளைஞரணி செயலாளர் சசிகுமார் உள்ளிட்டோர் பேசினர்.
அப்போது, தர்மபுரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டு நிவாரணம் வழங்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் டாக்டர் ராமதாஸை கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
இந்த ஆர்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைக் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், அமைப்பாளர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராமசாமி, கிராம லட்சியம் அமைப்பு பொருளாளர் ஜெயசித்ரா, திருவள்ளவர் தமிழ் சங்க அமைப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications