For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக பாஜக தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் தேர்வு

Google Oneindia Tamil News

Pon Radhakrishnan
சென்னை: தமிழக பாஜக தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாஜக மாநில அமைப்பு தேர்தல் சென்னை பூவிருந்தவல்லியில் நடைபெற்றது. அதில் தேசிய செற்குழு உறுப்பினர்கள் 39 பேர் ஆதரவுடன் ஒரு மனதாக பொன்.இராதாகிருஷ்ணன் தமிழக மாநிலத் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், தேசிய செயற் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் தேசிய செற்குழு உறுப்பினர்கள் 39 பேர் ஆதரவுடன் ஒரு மனதாக மீண்டும் பொன்.இராதாகிருஷ்ணன் தமிழக மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பார்.

இந் நிகழ்ச்சியில் பா.ஜ.க.தேசிய செயலாளர் முரளிதரராவ், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பண்டாருதத்தாத்ரேயா, இல.கணேசன், சி.பி.இராதாகிருஷ்ணன், இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன், முன்னாள் மாநிலத்தலைவர் கே.என்.லட்சுமணன், மாநிலத்துணை தலைவர்கள் எச்.ராஜா, தமிழசை செளந்தராஜன், மாநில அமைப்பு பொதுசெயலார் எஸ்.மோகனராஜிலு, மாநில விவசாய அணி தலைவர் எம்.பாஸ்கரன், கோட்ட அமைப்பாளர் எஸ்.நடராஜன் உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

English summary
Tamil Nadu state BJP President Pon Radhakrishnan was today elected for a second successive term for the post. He was declared elected unanimously by party's Central observer and former Minister Bandaru Dattatreya in the presence of senior leaders including Muralidhar Rao, party's state-in-charge and former state unit presidents L Ganesan and C P Radhakrishnan. A former Union Minister, who was inducted in the A B Vajpayee-led government in 1999, Radhakrishnan's second term as BJP's state unit president will last for three years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X