புத்தொளிக் கதிர்கள் பூத்திடாதா.. கருணாநிதியின் ஏக்கம் நிரம்பிய புத்தாண்டு வாழ்த்து

ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பையொட்டி திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
தமிழக முன்னேற்றத்தில் பல தடைக்கற்களை ஏற்படுத்திய 2012ம் ஆண்டு முடிவடையும் வேளையில், புத்தொளிக் கதிர்கள் பூத்திடாதா எனும் ஏக்கத்துடன் 2013ம் ஆண்டினை வரவேற்கிறேன்.
2012 - சென்னை நீங்கலாகத் தமிழகம் முழுவதும் 18 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால்; தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுப் பல்லாயிரக்கணக்கான சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன; இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை இழந்து தவிக்கின்றனர்; பொருளாதாரம் சிதைந்து, சீரழிந்துள்ளது; வீடுகளில் இருள் கப்பி அல்லல்படும் தாய்மார்களுடன், பள்ளிக் குழந்தைகள் எல்லாம் தேர்வுக்குக்கூடப் படிக்க முடியாத அவலத்திற்கு ஆட்பட்டுள்ளனர்.
தமிழகத்திற்கு - தமிழக மக்களுக்கு இத்தகைய எண்ணற்ற இன்னல்களை இழைத்த 2012ம் ஆண்டு மறையட்டும்!
"கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்"
எனும் திருக்குறள் கூறுவதுபோல், விளைந்துள்ள கேடுகளை எண்ணிப்பார்த்து வாழ்வின் விடியலுக்கு, தமிழக முன்னேற்றத்திற்கு உதவுவோர் யார் என அடையாளம் காணும் உணர்வினை 2013ம் ஆண்டு தமிழக மக்களிடையே வளர்க்கட்டும் எனக் கூறித் தமிழக மக்களுக்கு உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications