அலைமோதும் சுற்றுலா பயணிகளால் திணறும் பாபநாசம் அகஸ்தியர் அருவி
பாபநாசம்: அகஸ்தியர் அருவில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு-முண்டத்துறை புலிகள் காப்பக பகுதியில் ஏராளமான அருவிகள் உள்ளன. இதில் பல அருவிகளில் மழை காலங்களில் மட்டுமே தண்ணீர் விழும். சில அருவிகளில் சீசன் காலங்களில் மட்டுமே தண்ணீர் விழும். ஆனால் அகஸ்தியர் அருவியி்ல் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். இதனால் இங்கு எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில் புலிகள் காப்பாக பகுதிகளில் சுற்றுலா மேற்கொள்ள கடந்த ஜூலை 24-ந் தேதி உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் இத்தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து 5 மாத இடைவெளிக்கு பின்னர் கடந்த 7-ந் தேதி பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதித்தனர்.
குற்றாலத்தில் சீசன் இல்லாததால் ஏராளமானோர் அகஸ்தியர் அருவிக்கு படையெடுக்கின்றனர். பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுகிழமை என்பதாலும் அகஸ்தியர் அருவியில்கூட்டம் அலைமோதியது. ஆனால் இங்கு சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. அருவி பகுதியில் உடை மாற்றுவதற்கு தனி இடம் இல்லாததால் பெண்கள் பெரும் சிரமத்தி்ற்கு உள்ளாகி வருகின்றனர். அருவியில் ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தடுப்பு சுவர் இல்லாத நிலை உள்ளது. இதனால் சில நேரங்களில் பெண்கள் பிரச்சனையை சந்தி்க்க வாய்ப்பு உள்ளது. எனவே வனத்துறையினர் கட்டுபாட்டில் உள்ள அகஸ்தியர் அருவியில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications