செல்போன் மூலம் ரயில் வரும் நேரம்,இடம்,இருக்கை வசதி பற்றிய அறியலாமே...
சென்னை : உங்கள் செல்போன் மூலம் இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தும் ரயில் வரும் நேரம் , இடம், இருக்கை வசதி ஆகியவற்றை அறிய கொள்ள ரயில்வே நிர்வாகம் எளிய முறையில் வசதியை அளித்துள்ளது.
பேருந்து பயணங்களை விட ரயில் பயணம் என்பது எளிதான ஒன்றாகிவிட்டது.. முன்பதிவு செய்துவிட்டால் போதும்.. இன்னும் உங்கள் பயணம் எளிதாகிப் போகும்... முன்பதிவு செய்துவிட்டு டிக்கெட் கன்பார்மா? இல்லையா? என பி.என்.ஆர். ஸ்டேட்டஸ் பார்த்துக் கொண்டிருந்த காலமும் இப்போதெல்லாம் மலையேறத் தொடங்கிவிட்டது..
நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து இன்டர்நெட் வழியே எங்கே ரயில் வருகிறது? அடுத்து என்ன ஸ்டேஷன் வரும்? எவ்வளவு நேரம் தாமதம் போன்ற விவரங்கள் கிடைத்துவிடுகிறது இப்பொழுது.. ஒவ்வொரு நிமிடமும் உங்களது பி.என்.ஆர். ஸ்டேட்டஸை நெட்டிலும் தெரிந்து கொண்டே இருக்கலாம்.
இப்பொழுது இன்னும் எளிமையாக ஜஸ்ட் உங்கள் மொபைல் போன் போதும்... ரயில் பயணம் பற்றிய அனைத்து விவரத்தையும் அப்படியே இலகுவாகப் பெற்றுவிட முடியும்.. எங்க வேண்டுமானாலும் பயணம் செய்து கொண்டு... என்ன பணியும் செய்து கொண்டு...
எப்படி இனத் தெரிய இதைப் படியுங்கள்..

ரயில் வரும் நேரம், இடம், புறப்படும் நேரம் அறிந்து கொள்ள
ரயில் வரும் நேரம், தற்போது ரயில் வந்து கொண்டு இருக்கும் இடம், புறப்படும் நேரம் , சென்றடையும் நேரத்தை அறிய உங்களது செல் போனில் spot என டைப் செய்து, சிறிது இடைவெளி விட்டு வண்டி எண் XXXXX செய்து 139 -க்கு அனுப்பினால், உடனே அறிந்து கொள்ளலாம். மேலும், தாமதமாக வரும் ரயில் குறித்த விவரங்களையும் கூட அறியலாம்.

முன் பதிவு நிலையை அறிந்து கொள்ள
உங்களது செல் போனில் PNR என டைப் செய்து 10 இலக்க PNR எண்ணை குறிப்பிட்டு, 139 -க்கு அனுப்பினால், முன் பதிவு குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும்.

இட வசதி நிலையை அறிந்து கொள்ள
உங்களது செல் போனில் SEAT , வண்டி எண், பயண தேதி, புறப்படும் இடம், STD கோட் எண், ரயில் பயணம் செல்லும் வகுப்பு, கோட்டா , ஆகியவற்றை டைப் செய்து 139 -க்கு அனுப்பினால் இருக்கை குறித்த விவரங்கள் கிடைக்கும்.

பயண கட்டணம் குறித்த விவரம் அறிந்து கொள்ள
உங்களது செல் போனில் FARE என டைப் செய்து, ரயில் புறப்படும் இடம் ,தேதி, சேரும் இடம், வகுப்பு ஆகியவற்றை குறிப்பிட்டால் கட்டண விவரம் உடனே கிடைத்துவிடும்.
இனி என்ன கவலையைவிடுங்க! செல் போன் எடுங்க. தகவலை உடனே தெரிந்து கொள்ளுங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications