பிரதீபா பாட்டீல் ரிடையராகியும் விதிகளை மீறி அவரது குடும்பத்தாரை பாதுகாக்க 19 போலீசார்

மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரதீபா பாட்டீல் கடந்த 2007ம் ஆண்டு ஜூன் மாதம் ஜனாதிபதியானபோது அவரது கணவர் தேவிசிங் செகாவத், மகன் ராஜேந்தர், மகள் ஜோதி, மருமகள் மஞ்சிரி, மருமகன் ஜெயேஷ், பேரன்கள் பிரித்வி, த்ருவேஷ், பேத்திகள் சௌரபி மற்றும் வேதிகா ஆகியோருக்கு பாதுகாப்பு அளி்க்குமாறு மத்திய அரசு மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து பிரதீபா பாட்டீலின் கணவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு, மகன் மற்றும் மகளுக்கு ஒய் பிரிவு, மீதமுள்ள 6 பேருக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதன்படி ஒரு எஸ்.ஐ. மற்றும் 18 கான்ஸ்டபிள்கள் பிரதீபா பாட்டீலின் குடும்பப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பிரதீபா ஜனாதிபதி பதவியில் இருந்து கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவரது குடும்பத்தாருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு வாபஸ் பெறவில்லை. பிரதீபா பாட்டீலின் குடும்பத்தாருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பை வாபஸ் பெற அனுமதி அளிக்குமாறு மகாராஷ்டிர அரசு உள்துறை அமைச்சகத்தை மூன்று முறை அணுகியும் பதில் கிடைக்கவில்லை.
மாநிலத்தில் உள்ள போலீசாரில் பலர் அரசியல் தலைவர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கை காக்க போலீசார் போதுமான அளவில் இல்லை என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications