நிதீஷ் குமார் கையில் எவ்வளவு காசு இருக்குன்னு தெரியுமா...?
பாட்னா: பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது அமைச்சர்களை விட மிகவும் குறைந்த அளவிலான சொத்துக்களை வைத்திருக்கிறாராம்.
நிதீஷ் குமார் மற்றும் அவரது அமைச்சர்கள் 2012ம் ஆண்டு நிலவரப்படி தங்களது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். அதில் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
3வது ஆண்டாக நிதீஷ் குமாரும், அவரது அமைச்சர்களும் தங்களது சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

கைக்காசு ரூ. 14,475 மட்டுமே
முதல்வர் நிதீஷ் குமாரிடம் ரொக்கமாக வெறும் ரூ. 14,475 மட்டுமே உள்ளதாம். 2011ம் ஆண்டு ரூ. 46,974 ரூபாய் வைத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

சுஷில் குமார் மோடி
துணை முதல்வர் சுஷில் குமார் மோடியிடம் ரூ. 20,000 ரொக்கம் உள்ளதாம். சுற்றுலாத்துறை அமைச்சர் சுனில் குமார் பின்டு ரூ. 8,74,000 வைத்துள்ளார்.

நிதீஷின் பிற சொத்துக்களில் மாற்றமில்லை
நிதீஷ்குமாரின் பிற சொத்துக்களில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. கடந்த ஆண்டு வைத்திருந்த அளவிலேயே இந்த முறையும் வைத்திருக்கிறார்.

டெல்லியில் ரூ. 40 லட்சம் வீடு
டெல்லியில் சன்சாத் விஹார் பகுதியில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான வீடு நிதீஷ்குமாருக்கு உள்ளது. மேலும் ரூ. 6.15 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் அவரிடம் உள்ளன.

சில பசு மாடு...பழைய டிவி பெட்டி
2003ம் ஆண்டு மாடல் கார், ஒரு பழைய டிவி பெட்டி, ஒரு பழைய ஏசி மெஷின், ஒரு பிரிட்ஜ், ஒரு ஏர் கூலர், சில பசுமாடுகள், கம்ப்யூட்டர், ஒரு டிரட்மில், வங்கியில் வாங்கிய லோன். இவைதான் நிதீஷின் பிற சொத்துக்கள்.

நிதீஷ் மகனிடம் அதிக சொத்து
தனது மகன் நிஷாந்த் பெயரில் கல்யான்பிகா கிராமத்தில் உள்ள பாரம்பரிய நிலத்தை அதில் கணக்கு காட்டியுள்ளார். இருப்பினும் நிதீஷை விட அவரது மகனிடம் நிறைய சொத்துக்கள் உள்ளன.

ஷாஹிதான் பெரும் பணக்காரர்
பீகார் அமைச்சர்களிலேயே மிகவும் பணக்காரர் பி.கே.ஷாஹிதான். வக்கீலான இவர் ரூ. 5 கோடிக்கும் மேலான சொத்துக்களை வைத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications