மதுரையில் அதிமுக சுவர் விளம்பரங்கள் அழிப்பு: மிசா பாண்டியன் உள்ளிட்ட திமுகவினர் மீது வழக்கு
மதுரை: மதுரையில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் மார்க்கெட் சுவரில் எழுதப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விளம்பரத்தை அழித்தது தொடர்பாக திமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புத்தாண்டையொட்டி நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர்
மு.க. அழகிரி கூறுகையில், பிப்ரவரி மாதம் வரும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் சுவர் விளம்பரங்கள் இருக்கையில் ஜனவரியில் வரும் எனது பிறந்தநாள் சுவர் விளம்பரங்கள் மட்டும் அதிமுகவினரால் அழிக்கப்பட்டுள்ளது. அந்த விளம்பரங்களை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளதோடு அதிமுகவின் சுவர் விளம்பரங்களையும் அழிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். அவ்வாறு அழிக்காவிட்டால் திமுகவினரே அதை அழிப்பார்கள் என்றார்.
அவர் பேட்டி அளித்த அன்று இரவே 77வது வார்டில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் மார்க்கெட் சுவரில் இருந்த ஜெயலலிதா பிறந்தநாள் விளம்பரம் அழிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி அதிமுக வட்ட செயலாளர் ராஜேந்திரன் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அவர் தனது மனுவில், திமுக மாவட்ட பொருளாளரும், முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியன், கோம்கார்ட் குமார், டிரைவர் முத்து, அனஞ்சி நாகேந்திரன், மாணிக்கம் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications