மொட்டை மாடியில் மகள்களுடன் கண்ணாமூச்சி ஆடிய பெண் கீழே விழுந்து பரிதாப சாவு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மொட்டை மாடியில் மகள்களுடன் கண்ணாமூச்சி விளையாடிய பெண் கால் தவறி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி(எ) சதீஷ். அவருடைய மனைவி பத்மாவதி (35). கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பத்மாவதி தனது மகள்களுடன் இரவு நேரத்தில் 3வது மாடியான மொட்டை மாடியில் கண்ணாமூச்சி விளையாடியுள்ளார்.
கண்ணில் துணியைக் கட்டிக் கொண்டு மகள்களைப் பிடிக்கச் சென்ற பத்மாவதி மாடியின் விளிம்பிற்கு சென்றபோது நிலை தடுமாறியதைப் பார்த்ததும் அவரது மகள்கள் அலறினர். ஆனால் அதற்குள் அவர் மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டது. அவரது மகள்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பத்மாவதியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications