For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐவரி கோஸ்ட்டில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் நெரிசல்: 61 பேர் உடல் நசுங்கி பலி

By Siva
Google Oneindia Tamil News

Ivory Coast
அபித்ஜான்: மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் உள்ள அபித்ஜான் நகரில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 61 பேர் பலியாகியுள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் உள்ளது அபித்ஜான். அந்த நகரில் உள்ள பெலிக்ஸ் ஹவ்பௌட் பாய்க்னி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவில் புத்தாண்டை வரவேற்க ஏராளமானோர் கூடினர். நள்ளிரவில் புத்தாண்டு பிறந்தபோது வான வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

அப்போது வானவேடிக்கையைப் பார்க்க மக்கள் முந்தியடித்தனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 61 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிர் இழந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் 8 முதல் 15 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புத்தாண்டை வரவேற்க வந்த இடத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

English summary
61 people were crushed to death in a stampede after a New Year's Eve fireworks display at Felix Houphouet Boigny stadium stadium in Ivory Coast's main city Abidjan early on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X