சீர்காழி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி குத்தி கொலை
நாகை: சீர்காழி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா புதுப்பட்டினம் அருகே உள்ள கொடியம்பாளையம் என்ற ஊரில் கத்தியால் குத்தப்பட்டு குடல் வெளியே வந்த நிலையிலும், கண்கள் பிதுங்கிய நிலையிலும் கொள்ளிட ஆற்றங்கரையில் ஒருவரின் உடல் கிடந்தது.
இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த உடலை கைப்பற்றி பிரேத பறிசோதனைக்காக சீர்காழி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் ஆனந்தன் என்பவரின் மகன் சரவணன்(28) என்றும், அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளராகவும், டி.ஒய்.எப்.ஐ நகர பொருளாளராகவும் இருந்ததும் தெரிய வந்தது.
இந்த கொலை குறித்து புதுப்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிதம்பரம் வேலவன் நகரைச் சேர்ந்த தியானேஷ்வரன்(28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்து சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ரமேஷ் பாபு, கற்பனைச் செல்வன், சிதம்பரம் நகர செயலாளர் ராமச்சந்திரன், சீர்காழி வட்ட செயலாளர் சி.வி.ஆர் ஜீவானந்தம், வட்டக்குழு உறுப்பினர் கே.கேசவன் ஆகியோர் சீர்காழி அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று கொலை செய்யப்பட்ட சரவணனின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.












Click it and Unblock the Notifications