எனக்குப் பின் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்: கருணாநிதி திடீர் பேச்சால் பரபரப்பு

பாமக தலைவர் ராமதாஸ் தலித்களை தாக்கிப் பேசி வருவதையடுத்து அந்தக் கட்சியிலிருந்து தலித்கள் பெருமளவில் விலகி வருகின்றனர். இந் நிலையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாமகவினர் இன்று கருணாநிதி முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
திமுகவில் இணைந்தோரை வரவேற்றுப் பேசிய கருணாநிதி, நீங்கள் இங்கு வருவதற்கு காரணமாக இருந்த உங்கள் முன்னாள் தலைவருக்கு (ராமதாஸ்) என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மராட்டிய மாநிலத்தில் அம்பேத்கார் பல்கலைக் கழகம் கொண்டு வருவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 12 ஆண்டுகள் ஆகியும் அதனை கொண்டு வர முடியவில்லை.
எனது மூத்த மகன் மு.க. அழகிரியின் மனைவி காந்தி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அந்த பெண்ணை எனது மருமகளாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன். எனது மனைவியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அனைவரும் ஒரே சாதி என்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைக்கிறேன்.
அம்பேத்கருக்கு மணி மண்டபம் என் ஆட்சியில் கட்டப்பட்டது. சென்னையில் உள்ள சட்டப் பல்கலைக் கழகத்துக்கும் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது. அம்பேத்கரை திராவிட முன்னேற்ற கழகமே போற்றி வருகிறது.
இந்த சமுதாயம் மேன்மைக்காக எழுச்சிக்காக நான் என் ஆயுள் உள்ளவரை பாடுபடுவேன். இந்தப் பணியில் எனக்குப் பின்னால் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
தமிழ்இனம், திராவிட இனம், மொழி இனத்தை காக்க தங்களை அர்ப்பணித்து இந்த இயக்கத்தில் இணைந்து இருக்கிறீர்கள். நல்வாழ்வுக்கு இட்டுச் செல்லும் நம் இனத்தை மேண்மைபடுத்தி செல்வோம். முன்னேறி செல்வழிவகை காண்போம் என்றார் கூறியுள்ளார்.
திமுகவில் கருணாநிதிக்குப் பிறகு அடுத்த தலைவர் யார் என்பதில் அவரது மகன்களான மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி ஆகியோரிடையே கடுமையான மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் தமக்குப் பின்னால் ஸ்டாலின்தான் என்று கருணாநிதியே கூறியுள்ளது, திமுகவின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின்தான் வருவார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறதே என்றே பார்க்கப்படுகிறது.
கருணாநிதியின் இந்தப் பேச்சு மு.க.ஸ்டாலினின் ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவே கூறப்படுகிறது.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications