புதுவையில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை..நாராயணசாமி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

Narayanaswamy
புதுச்சேரி: புதுச்சேரியில் இத்தனை போலீஸார் இருந்தும் கூட பெண்களுக்கு அவர்களால் ஒரு பாதுகாப்பும் இல்லை, பயனும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரியில் பிளஸ்டூ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் நாராயணசாமி. பாதிக்கப்பட்ட மாணவியை அவர் மருத்துவமனைக்குச் சென்று பார்த்து நலம் விசாரித்தார். அவரது பெற்றோரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மிக கடுமையான சட்டங்கள் இருக்க வேண்டும்.

புதுவையில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் போலீசார் இருக்க வேண்டும். ஆனால் புதுவையில் போலீசார் எண்ணிக்கை அதிகமாக இருந்தும் எந்த பலனும் இல்லை.

மாணவி கற்பழிப்பு சம்பவத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நாராயணசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+